சில பெற்றோர்கள்....
தமது குழந்தைகளை வளர்க்க வேண்டிய சிறு பிராயத்தில்
நெறிப் படுத்தி சரியாக வளைத்து வளர்க்காமல், பெரிய மரமான பிறகு அவர்களை நிமிர்த்தி நேராக்க கடும் முயற்சி செய்கின்றனர்.
தமது குழந்தைகளை வளர்க்க வேண்டிய சிறு பிராயத்தில்
நெறிப் படுத்தி சரியாக வளைத்து வளர்க்காமல், பெரிய மரமான பிறகு அவர்களை நிமிர்த்தி நேராக்க கடும் முயற்சி செய்கின்றனர்.
முற்பகல் செய்தவை யாவும் பிற்பகலில் விளைவது இயற்கையின் நியதி!
சிறு வயதில் குழந்தைகளை ஒரு அடிமை போல் எண்ணி அடித்தும், உதைத்தும், திட்டியும், அவமானம் செய்தும் சோறு போட்டு உடல் மட்டும் வளர்த்து விட்டு, பிறகு அந்தக் குழந்தைகள் சிந்திக்கும்-பெரிய பருவம் வந்ததும் எதிர்த்து பேசி ஏடாகூடம் செய்வதைக் கண்டு அத்தகைய பெற்றோர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள்.
பிறகு, அந்த இளைஞனை அல்லது இளைஞியை குணப்படுத்த அங்கும் இங்கும் அழைத்துசென்று ஆண்டுக்கணக்கில் ஓடி அலைகிறார்கள்; பெரும் செலவு செய்தும் குணமடையாதது கண்டு உளம் வெதும்பி கண்ணீர் வடிக்கிறார்கள்!
"எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்" என்ற நிலையில் வசியம், மாந்திரிகம், வேள்விகள் செய்தல், கோவில் குளம் சுற்றுதல், பெயர் மாற்றுதல், வாஸ்து பார்த்தல், வண்ணக் கற்களில் மோதிரம் அணிதல், சாமியார் கால்களில் விழுதல், யோகா தியானம் செய்தல், அது இது என்று பாவம் நேரம்-பணம்-சக்தியை விரயம் செய்கிறார்கள்.
மேற்படி "நிபுணர்களும்...??", மணலை கயிறாகத் திரித்து, வானத்தை வளைப்பதாக உறுதி கூறி நாட்களை கடத்தி பணம் பறிக்கிறார்கள்! பணம் பறிக்காத சிலர் "புகழ்" பறிக்க இது போன்ற உத்திகளை கையாள்கிறார்கள்! நூற்றில் ஒருவர் "காக்கை உட்கார பனம் பழம் விழுந்த கதையாய்" கொஞ்சம் சரியானது போல் தோன்றினால் கூட அவர்கள் மூலம் மேலும் கூட்டம் சேர்ந்து "நிபுணர்" புகழ் அடைய ஆரம்பித்து விடுவார்.
செய்தி நிறுவனங்கள், மற்றும் அறிவியல் ஆய்வுக் கழகங்களுக்கு இதில் எந்த வித சமூகப் பொறுப்பும் இருப்பதில்லை என்பது ஆச்சர்யமான விஷயம்!
அறிவியல் என்பது, பயன் நோக்கம் உடையது.
நூற்றுக்கு நூறு பேர் பயன் பெறுகிறார்களா என்று
உறுதி செய்ய வேண்டியது அறிவியலின் கடமை.
குறைந்தது நூற்றுக்கு தொண்ணூறு பேர் பயன் அடிகிறார்கள், அட! குறைந்த பட்சம் எழுபது சதவிகிதம் பேர், என்றால் பரவாயில்லை! கண் பார்வை குறைபாடுக்கு சென்ற நூறு பேரில் பத்து பேர் ஏதோ கொஞ்சம் பார்வை பெற்று, அந்த பத்து பேர் நூறு பேரை கூட்டி வரும் வியாபாரமாக இந்தக் கலி காலம் மாறி விட்டது! மற்றபடி அந்த நூறு பேரில் தொண்ணூறு பேர் பார்வை பறிபோனது பற்றி அல்லது சரியாகதது பற்றி எவருக்கும் எந்த அறிவியலாளர்களுக்கும் இந்த உலகத்தில் அக்கறை இல்லை என்பது மகா விந்தை-வெட்கக் கேடு!
நூற்றுக்கு நூறு பேர் பயன் பெறுகிறார்களா என்று
உறுதி செய்ய வேண்டியது அறிவியலின் கடமை.
குறைந்தது நூற்றுக்கு தொண்ணூறு பேர் பயன் அடிகிறார்கள், அட! குறைந்த பட்சம் எழுபது சதவிகிதம் பேர், என்றால் பரவாயில்லை! கண் பார்வை குறைபாடுக்கு சென்ற நூறு பேரில் பத்து பேர் ஏதோ கொஞ்சம் பார்வை பெற்று, அந்த பத்து பேர் நூறு பேரை கூட்டி வரும் வியாபாரமாக இந்தக் கலி காலம் மாறி விட்டது! மற்றபடி அந்த நூறு பேரில் தொண்ணூறு பேர் பார்வை பறிபோனது பற்றி அல்லது சரியாகதது பற்றி எவருக்கும் எந்த அறிவியலாளர்களுக்கும் இந்த உலகத்தில் அக்கறை இல்லை என்பது மகா விந்தை-வெட்கக் கேடு!
பெற்றோர்களும் "கூடு விட்டு கூடு" பாய்வதை போல, ஆட்களை மாற்றிக் கொண்டு, "நாங்க தான் சரியில்லை! "அவங்க சொன்ன மாதிரி எங்களால தான் சரியாக "follow" பண்ண முடியல" என்று பேதைகளாக பிதற்றித் திரிவார்கள்!
ஆனால், அந்த வாலிபனோ உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே ஒரு வித பழி வாங்கும் உணர்வோடு பெற்றோர்களின் விருப்பத்துக்கு எதிராக செயல் பட்டு தன் கடந்த காலத்தை பழி தீர்த்துக் கொள்கிறான்.
அவனுக்கு தான் நலமடைவதை விட கெட்டவனாக இருந்து தன் பெற்றோர்களை பழி வாங்குவதே தலையாய இலட்சியமாய் இருக்கிறது.
அவனுக்கு தான் நலமடைவதை விட கெட்டவனாக இருந்து தன் பெற்றோர்களை பழி வாங்குவதே தலையாய இலட்சியமாய் இருக்கிறது.
இது போன்ற மன நோயாளிகளையும் மற்றும் பிறவிக் கோளாறுடன் பிறந்த பிணியாளர்கள்-ளையும் எந்த மனோ தத்துவ நிபுணர்களாலும் குணப் படுத்த இயலாது.
அறுவை சிகிச்சை மேடைக்கு ஒரு உடம்பு வந்து சேராமல் எப்படி அறுவை-சிகிச்சை செய்ய முடியாதோ, அதே போன்று, தான் நலம் அடைய வேண்டும் என்ற பூரண எண்ணம் இல்லாத ஒரு மனிதனை வலுக்கட்டாயமாக கூட்டி வந்து இந்த உலகத்தின் எந்தவொரு சிறந்த மன நல மருத்துவராலும் குணப்படுத்த இயலாது.
"தான் ஏதோ ஒரு வகையில் சரியில்லை". "கொஞ்சமாவது நான் மாற வேண்டும்", என்ற எண்ணம் இல்லாத எந்த மனிதனையும் எந்த புத்தராலும் மாற்ற இயலாது- அப்படி மாற்றுவதும் வழக்கத்தில் இல்லை.
அப்படி இருந்திருந்தால் இந்நேரம் எத்தனையோ ஞானிகள் இந்த உலகத்தை "நல்லவர்கள்" மட்டுமே வாழும் உலகமாக ஒரு நொடியில் மாற்றி இருப்பார்களே!
"தட்டுங்கள்-திறக்கப் படும்!
கேளுங்கள்-கொடுக்கப் படும்!" என்பது விவிலியம் கூறும் ஒரு நல் மொழி!
பாருங்கள்! கடவுளே சொல்கிறார்,
" நீ தட்டு- நான் என் கதவை திறக்கிறேன்!
" நீ தட்டு- நான் என் கதவை திறக்கிறேன்!
"நீ கேளு! நான் என்னிடம் உள்ளதை தருகிறேன்", என்று!
அதாவது, யாரும் கேட்காமல்..... இங்கு எதுவும் கிடைக்காது, என்பது இவ்வுலகத்தின் தெளிவானதொரு வேதம்.
அது புரியாமல் தான் மாற வேண்டும் என்ற தீவிர விருப்பமும், தகிக்கும் ஆசையும் இல்லாத ஒரு மனிதனை மாற்ற முயற்சிப்பது வீண் வேலை ஆகும்!
அது ஒரு வீண் வேலை மட்டுமல்ல-கால விரயம், சக்தி விரயம், பொருள் விரயம்!
ஆகவே! என் அருமை "யோ ஜென்" விரும்பிகளே!
அப்படிப் பட்ட, மாற விருப்பம் இல்லாத ஒரு ஜீவனை யாரும் தயவு செயதுஇங்கு கூட்டி வர வேண்டாம்!
நாம் செய்ய வேண்டிய நியாயமான பணிகளே இந்த உலகத்தில் ஆயிரம் உள்ளன!
எனவே, வலியோடும் துன்பத்தோடும் அழுபவர்களின் கண்களைத் துடைக்க இந்த எனது கரங்கள் பயன் படட்டுமே!
மற்றபடி, பெற்றோர்கள் அல்லது உடன் பிறந்தவர்களை வேண்டுமென்றே அழ வைத்துக் கொண்டு இருக்கும் "தன்-முனைப்பு-ஜீவன்கள்"-ளை (Egocentric Psychopaths) காலம் மட்டுமே, தக்க சமயத்திலோ அல்லது அடுத்த ஜன்மத்திலோ நெறிப் படுத்த இய !
மற்றபடி நான்
அல்லது நாம் உதவி செய்ய
அங்கு ஒன்றுமே இல்லை என்பது தான்
கசப்பான உண்மையாகும்!
- மோகன் பாலகிருஷ்ணா